விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளராக அதிமுக சார்பில் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவிக்கப்பட்டார்.
இதனை வரவேற்கும் வகையில் அதிமுக சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர் கிருஷ்ணராஜ், மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் துரைமுருகேசன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள், ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானவில் இருந்து, பழைய பேருந்து நிலையம் வரை ஊர்வலமாக சென்றதுடன், பட்டாசு வெடித்து ஆட்டம் ஆர்ப்பாட்டத்துடன் இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு கொண்டாடினர்.
அப்போது மழை பெய்ததால், அதிமுகவிற்கே வெற்றி எனவும் மக்கள் என்றும் குளிர்ச்சியாக இனிமையாக இருப்பார்கள் என்றும் பேசிக்கொண்டனர்.
இதையும் படிங்க: அதிமுக, பாமக 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு