ETV Bharat / state

'அதிமுகவுக்கு இனி எதிர்காலம் இல்லை' - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் - MINISTER KKSSRR INAUGURATED NEW BUS ROUTE

அதிமுகவுக்கு இனி எதிர்காலம் இல்லை என்று சொல்கிற தேர்தலாக இந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளது என்று வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் பேச்சு
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் பேச்சு
author img

By

Published : Oct 15, 2021, 8:04 PM IST

விருதுநகர்: கோட்டூரில் புதிய பேருந்து வழித்தடத்தை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் இன்று(அக்.15) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், " தமிழ்நாட்டில் நடந்து முடிந்த ஒன்பது மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் திமுக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

அதற்கு காரணம் இந்த ஆட்சிக்கு இருக்கும் நல்ல பெயர் தான். பொது மக்கள் இந்த ஆட்சிக்கு தருகின்ற நற்சான்றாக இந்த உள்ளாட்சி தேர்தல் வெற்றி அமைந்துள்ளது. அதிமுக ஆளும்கட்சியாக இருந்த போது கூட உள்ளாட்சித் தேர்தலில் திமுக 50 முதல் 60 விழுக்காடு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது.

ஆனால் இந்த நான்கு மாத காலத்தில் அதிமுக இருக்கும் இடம் தெரியாமல் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. அதிமுக கட்சிக்கு இனி எதிர்காலம் இல்லை என்று சொல்கிற தேர்தலாக இந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளது.

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் பேச்சு

உள்ளாட்சி தேர்தலின் போது எந்த இடத்தில் தகராறு ஏற்பட்டது என்று குறிப்பிட்டு கூறினால் ஏற்றுக் கொள்கிறோம். தேர்தல் நேர்மையாக நடைபெற்று முடிந்தது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மி சூதாட்டங்களுக்கு மீண்டும் தடை?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.