கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு தழுவிய ஊரடங்கு தற்போது ஐந்தாம் கட்டமாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் தற்போதுவரை பல்வேறு மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துவருகின்றனர்.
இதனைக் கருத்தில் கொண்டு, விருதுநகர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தேவைகளை அறிய மூன்றாயிரத்து 83 குடும்பங்களிலும் நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், மக்களின் கோரிக்கைகளை சேகரித்து அதனை அறிக்கையாக தயாரித்து மாவட்ட ஆட்சியர் கண்ணனிடம் வழங்கினர். இந்த அறிக்கையில், நியாய விலை கடையில் அரிசி அட்டைதாரர்களுக்கு 7500 ரூபாயினை மத்திய அரசும், 5000 ரூபாயினை மாநில அரசும் வழங்கவேண்டும். தலா ஒரு நபருக்கு மாதம் 10 கிலோ உணவு தானியம் என்பதன் அடிப்படையில் ஆறு மாதங்களுக்கு வழங்கவேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாள்களாக மாற்றி பணிபுரிபவர்களுக்கு அரசு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.