ETV Bharat / state

'பட்டாசு தொழிலில் குழந்தைத் தொழிலாளர்கள்..'- நிபுணருக்கு விருதுநகர் எம்பி பதிலடி! - விருதுநகர் எம்பி

குழந்தை தொழிலாளர்களை பெருமளவு நம்பியிருக்கும் துறை பட்டாசு உற்பத்தி தொழிற்துறை என ட்விட்டரில் பதிவிட்ட பொருளாதார நிபுணருக்கு, விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

child labours on sivakasi crackers industry
'பட்டாசு தொழிற்துறையில் குழந்தைத் தொழிலாளர்கள்..'- ட்வீட் பதிவிட்டவருக்கு விருதுநகர் எம்பியின் பதிலடி
author img

By

Published : Nov 14, 2020, 10:06 PM IST

விருதுநகர்: குழந்தை தொழிலாளர்களை பெருமளவு நம்பியிருக்கும் துறை பட்டாசு உற்பத்தி தொழிற்துறை என ட்விட்டரில் பதிவிட்ட பொருளாதார நிபுணருக்கு விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார்.

"அதிக மாசுபாட்டை ஊக்குவிக்கும், குழந்தைத் தொழிலாளர்களை நம்பியுள்ள தொழிற்துறையை ஆதரிப்பது எந்த மாதிரியான செயல்பாடு எனத் தெரியவில்லை" என அமெரிக்காவின் புகழ்பெற்ற பத்திரிக்கையொன்றில் கட்டுரை எழுதும் பொருளாதார நிபுணர் ட்வீட் செய்திருந்தார்.

அதற்கு பதிலளித்து ட்வீட் செய்திருந்த விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர், "சிவகாசி பட்டாசு உற்பத்தி துறை 100ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சட்டப்பூர்வமாக இயங்கும் 1,000க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் 60ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகிறார்கள்.

வதந்தியைப் பரப்பாதீர்கள். டெல்லியிலிருந்து மதுரைக்கு தினமும் இரண்டு விமானங்கள் உள்ளன. அதில், வந்து சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளைப் பார்வையிடுங்கள். ஒரு குழந்தைத் தொழிலாளர் சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் இருந்தால் நான் எனது மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினமா செய்துவிடுகிறேன்.

child labours on sivakasi crackers industry
மாணிக்கம் தாகூரின் ட்வீட்

பிறரின் கடின உழைப்பை மதியுங்கள். உலகளாவிய பட்டாசுகளின் சந்தையில் சீனா இருக்கும் இடத்தை பிடிக்கும் திறமை சிவகாசிக்கு உள்ளது. ஆனால், வதந்திகளைப் பரப்புவர்கள் அதை தடுக்கிறார்கள். நீங்கள் அந்த வரிசையில் இருக்கவேண்டாம்" எனத் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து மாணிக்கம் தாகூரின் ட்வீட்டுக்கு பதிலளித்த பொருளாதார நிபுணர்," ஒருநாள் சிவகாசி வந்து பார்ப்பேன் என நம்புகிறேன். சிவகாசியில் வாழும் மக்களுக்கு பட்டாசுகளை தயாரிப்பதை விட சிறந்த மாற்று இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது அவர்களுக்கும் நல்லதல்ல, சுற்றுச்சூழலுக்கும் நல்லது அல்ல. பட்டாசு உற்பத்தி ஒரு வேலை என்பது எனக்கு புரிகிறது" எனப் பதிலளித்தார்.

பட்டாசு தொழிற்துறையில் குழந்தைத் தொழிலாளர் ஈடுபடுத்தப்படுவதாக கருத்து பதிவிட்டவரை ஆரோக்கியமான முறையில் விவாதத்திற்கு அழைத்த மாணிக்கம் தாகூர், சிவகாசி வந்து பார்வையிடும் வரை குழந்தைத் தொழிலாளர் குறித்து பேசவேண்டாம் என்றும் இந்த குழந்தைத் தொழிலாளர் பூச்சாண்டி சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் உலகச்சந்தையில் நுழைவதைத் தடுக்க பயன்படுகிறது என்றும் ட்வீட் செய்திருந்தார்.

இதையும் படிங்க: அருந்ததி ராய் புத்தகம் நீக்கம் - எம்.பி மாணிக்கம் தாகூர் கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.