விருதுநகர் மாவட்டம் சின்ன சுரைக்காய்பட்டி பகுதியில் சீனிவாசன் என்பவர் நாய் பண்ணை வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது காரை அப்பகுதியிலுள்ள அலுவலகம் அருகே நிறுத்தியுள்ளார். இந்நிலையில் திடீரேன கார் தீப்பிடித்து எரியத்தொடங்கியுள்ளது.
இதில், காரின் முன்பகுதி முழுவதும் மளமளவென எரிந்து, தீப்பற்றியதைக் கண்ட அருகிலிருந்தவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராஜபாளையம் தீயணைப்புத் துறையினர் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மெற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த கவுதம் என்பவர், சீனிவாசன் மீதான முன்விரோதம் காரணமாக காருக்கு தீவைத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த காவல் துறையினர், மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஃபேஸ்புக்கில் பாகிஸ்தான் சார்பு பதிவு: அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது வழக்கு!