விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அம்மாப்பட்டி பகுதியில் மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கோட்டையூரில் இருந்து சிவகாசிக்கு தீப்பெட்டி பண்டல் ஏற்றி வந்த சிறியரக சரக்கு வாகனத்தை முருகன் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
தூக்க கலக்கத்தின் காரணமாக வளைவில் திரும்பும் போது எதிரே வந்த காரின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் காரில் பயணம்செய்த தாய் கல்பனா, சிறுமி மோகனலட்சுமி இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
தகவல் அறிந்துவந்த நத்தம்பட்டி காவல் துறையினர் காயம் அடைந்த இருவரையும் காவல் துறை வாகனத்தில் ஏற்றி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துசென்றனர். மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து - நடத்துநர் உள்பட இருவர் உயிரிழப்பு!