ETV Bharat / state

தங்கம் தென்னரசு தாயார் மறைவு - தலைவர்கள் நேரில் அஞ்சலி - தலைவர்கள் நேரில் அஞ்சலி

விருதுநகர்: உடல்நலக்குறைவால் காலமான முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் தாயாரின் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

thangam thennarasu
thangam thennarasu
author img

By

Published : Oct 5, 2020, 11:36 AM IST

மறைந்த முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மனைவி ராஜாமணி தங்கபாண்டியன் (84) நேற்றிரவு (அக்.4) வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் காலமானார். இவர் முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தென்சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனின் தாயாருமாவார்.

மல்லாங்கிணறில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவர் உடலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், அருப்புக்கோட்டை எம்எல்ஏ கே.கே.எஸ்.எஸ்ஆர் ராமசந்திரன், ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் எம்எல்ஏ பொன்னுசாமி, தென்காசி முன்னாள் எம்பி லிங்கம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

தங்கம் தென்னரசு தாயார் மரணம்

இன்று மாலை 4 மணிக்கு மல்லாங்கிணறு கிராமத்தில் உள்ள தங்கப்பாண்டியனது சமாதி அருகே ராஜாமணியின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. முன்னதாக அவரது மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!' - பொடிவைத்து ட்வீட் செய்த ஓ.பன்னீர்செல்வம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.