தூத்துக்குடி மாவட்டம் சில்லாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமண பெருமாள், அவரது மனைவி இந்துராணி ஆகிய இருவரும் நத்தத்துப்பட்டியிலுள்ள கோயிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது சரியாக 10 மணி அளவில் உப்பத்துர் விலக்கு அருகே எதிர்பாராதவிதமாக பின்னால் வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே லட்சுமண பெருமாள் மனைவி இந்திரா(50) உயிரிழந்தார். இதில் லட்சுமண பெருமாள் படுகாயமடைந்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்த சாத்தூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அப்பெண்ணின் உடலை கைப்பற்றி, சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர். மேலும் படுகாயமடைந்த லட்சுமண பெருமாளை சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
இச்சம்பவம் குறித்து, காரை ஓட்டி வந்து, விபத்து ஏற்படுத்திய தூத்துக்குடி மாவட்டம் அகிலாண்டபுரத்தைச் சேர்ந்த வர்கீஸ் (50) மீது, சாத்தூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆபாச படம் அனுப்பி பெண் வேட்பாளருக்கு மிரட்டல்!