ETV Bharat / state

விரக்தியின் காரணமாகவே ஆளுநரிடம் திமுக மனு - அமைச்சர் கடம்பூர் ராஜு சாடல்

விருதுநகர்: ஆளுநரிடம் திமுக மனு கொடுத்ததற்கு விரக்தி காரணம் என அமைச்சர் கடம்பூர் ராஜு சாடியுள்ளார்.

அமைச்சர் கடம்பூர் ராஜு
அமைச்சர் கடம்பூர் ராஜு
author img

By

Published : Feb 6, 2020, 9:23 AM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு தனது பேத்தியின் காதணி விழாவிற்காக வந்திருந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், "5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்த நிலையில், அதை ஏற்று பொதுத்தேர்வு இல்லை என்று அறிவித்துள்ளோம். மக்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் அதிமுக அரசு செயல்படுத்தாது" என்றார்.

அமைச்சர் கடம்பூர் ராஜு

மேலும், ஸ்ரீவில்லிபுத்தூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் மனிதச் சங்கிலி போராட்டத்தில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தியதால் கல்வித்துறை மூலம் பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலை தேர்தல் ஆணையம் எப்போது அறிவித்தாலும் அரசு தேர்தலை நடத்தும். விரக்தியின் காரணமாக ஆளுநரிடம் திமுக மனு கொடுத்துள்ளது. திமுக பேசும் கருத்துக்கு எதிராக நீதிமன்றம் சென்றால் அவர்கள் எந்தக் கருத்தும் பேச முடியாது என்று கூறினார்.

இதையும் படிங்க: 'நீட் தேர்வால் கஷ்டப்படுவது நாங்கள்தான்' - அமைச்சர் செங்கோட்டையன் காட்டம்

Intro:விருதுநகர்
05-02-2020

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவருடைய கருத்தை தெரிவித்துள்ளார். விரக்தியின் காரணமாக ஆளுநரிடம் திமுக மனு கொடுத்துள்ளது. திமுக பேசும் கருத்துக்கு எதிராக நீதிமன்றம் சென்றால் அவர்கள் எந்தக் கருத்தும் பேச முடியாது - செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு சாடல்

Tn_vnr_03_kadamboor_raju_byte_vis_script_7204885Body:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கோவிலில் தனது பேத்தியின் காதணி விழாவில் கலந்து கொண்டு பின்னர் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசியவர், 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்த நிலையில் அந்த கோரிக்கையை ஏற்று பொதுத்தேர்வு இல்லை என்ற மக்கள் விரும்புகின்ற அறிவிப்பை அறிவித்துள்ளோம். மக்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் இந்த அரசு செயல்படுத்தாது. ஸ்ரீவில்லிபுத்தூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் மனித சங்கிலி போராட்டத்தில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தியதால் கல்வித்துறை மூலம் பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 100% ஜனநாயக முறைப்படி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலை தேர்தல் ஆணையம் எப்போது அறிவித்தாலும் இந்த அரசு தேர்தலை நடத்தும். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவருடைய கருத்தை தெரிவித்துள்ளார். திமுகவிற்கு புகார் கொடுப்பது மட்டும் தான் வேலை. விரக்தியின் காரணமாக ஆளுநரிடம் திமுக மனு கொடுத்துள்ளது. திமுக பேசும் கருத்துக்கு எதிராக நீதிமன்றம் சென்றால் அவர்கள் எந்தக் கருத்தும் பேச முடியாது.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.