விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து, இஸ்லாமிய அமைப்பினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது ''அமைதி பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டில் மத கலவரம் ஏற்படுத்தும் வகையில் சங்பரிவார கருத்துகளை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசிவருவதாகவும் அவருடைய அமைச்சர் பொறுப்பை பறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனக் கூறி கண்டன கோசங்கள் எழுப்பப்பட்டன.
மேலும், மதசார்பின்மைக்கு எதிராக அமைச்சர் நடந்துகொள்வதாகவும் இந்து மற்றும் இஸ்லாமிய மக்களிடையே பிளவு ஏற்படுத்தும் வகையில் அவருடைய பேச்சு அமைந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டினர். இந்த ஆர்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டம்: பல்வேறு மாவட்டங்களில் போராட்டம்