விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்நிலையில் கரோனா தொற்று காரணமாகத் தமிழ்நாடு அரசு ஏப்ரல் 10ஆம் தேதிமுதல் கோயில் திருவிழாக்களை நடத்த தடைவிதித்திருந்த நிலையில் எரிச்சநத்தம் பகுதியில் தடையை மீறி திருவிழாக்கள் நடைபெற்றன.
பக்தர்கள் கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றாமல் நேற்று அக்கினிச்சட்டி, பறவைக்காவடி எனத் தங்களுடைய நோ்த்திக்கடன்களைச் செலுத்திவந்தனா்.
பறவைக்காவடி எடுத்துவரும்போது எரிச்சநத்தத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வெளியூரைச் சேர்ந்தவா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னா் அது கைகலப்பில் முடிவடைந்தது. இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மேலும் பறவைக்காவடி அதே இடத்தில் நிறுத்திவைக்கப்பட்டு பின்னரே கிளம்பிச் சென்றது. சம்பவ இடத்தில் காவலர்கள் ஒருவர்கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.