விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரத்தில் தனியார் தொண்டு நிறுவனத்துடன், தனியார் பள்ளி இணைந்து நடத்தும் சர்வதேச அளவிலான தரவரிசை சதுரங்க போட்டிகள் நேற்று தொடங்கின.

இப்போட்டிகள் ஆகஸ்ட் 4 வரை நடைபெறும் எனவும், வெற்றி பெறும் வீரர்களுக்கு நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.