விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பனையப்பட்டி கிராமம் காட்டு பகுதி அருகே அமைந்துள்ளது. இதனால் இப்பகுதியில் புள்ளி மான்கள் அதிகமாக வசித்து வருகின்றன.
தற்போது கோடைகாலம் துவங்கியதால் காட்டுப் பகுதியில் குடிப்பதற்கு நீர் இல்லாமல் புள்ளிமான்கள் நகர்பகுதிக்கு வருகின்றனர்.
இந்நிலையில் ஆண் புள்ளிமான் ஒன்று வழி தவறி ஊருக்குள் வந்தது. அப்போது ஊருக்குகள் சுற்றி திருந்த தெரு நாய்கள் மானை விரட்டி காயப்படுத்தின. இதனை கண்ட அப்பகுதி பொது மக்கள் புள்ளி மானை மீட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அதனை மீட்டு சிகிச்சை அளித்து பின் காட்டிற்குள் விட்டனர்.
கோடைகாலம் என்பதால் வனத்துறையினர் வனவிலங்குகளின் குடிநீர் பிரச்சினையை போக்க குடிநீர் கிடைக்க வழிவகை செய்தால் சிறப்பாக இருக்கும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.