விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையில் புலி, யானை, சிறுத்தை, கரடி, காட்டு மாடு, மான் என ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. ஆண்டுதோறும் வன விலங்குகளின் எண்ணிக்கை கணக்கெடுக்கும் பணி நடைபெறும்.
அதன்படி இந்தாண்டும் கணக்கெடுக்கும் பணி கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்றது. இதில் கடந்த ஆண்டைவிட இந்தாண்டு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வனவிலங்குகளின் எண்ணிக்கை கணிசமாக கூடியுள்ளது.
வனப்பகுதியில் அடிக்கடி வன ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் சோதனை செய்ததன் காரணமாக வனவிலங்குகள் வேட்டையாடுதல் பெருமளவு குறைந்துள்ளது.
இதன் காரணமாக யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டு மாடு, மான்கள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: மனிதர்களுக்கு பூட்டு... விலங்குகளுக்கு சுதந்திரம்!