ETV Bharat / state

விருதுநகரில் பிளாஸ்மா வங்கி அமைக்க பரிசீலனை -ராதாகிருஷ்ணன்!

author img

By

Published : Aug 5, 2020, 2:24 PM IST

விருதுநகர்: மாவட்டத்தில் பிளாஸ்மா வங்கி தொடங்க பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்ச் சந்திப்பு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அரங்கில் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சுகாதார பணியாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் கண்ணன் முன்னிலையில் மாநில சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன் ஆய்வு நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை அருப்புக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம் போன்ற நகர்ப்புறங்களில் நோய்தொற்று வேகம் அதிகமாக உள்ளது.

உலக சுகாதார நிறுவனம், அறிவியல் வல்லுநர்கள் கூறியுள்ளபடி நிலையான மருந்து, தடுப்பூசி இல்லாத நிலையில் முகக்கவசம் மட்டுமே நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க அடிப்படையான ஒன்று. பொதுமக்கள் முகக்கவசங்களை முழுமையாக பயன்படுத்தாமல் இருப்பதாலும் நோய்த்தொற்று வேகமாக பரவிவருகிறது.

மேலும் தமிழ்நாட்டில் 92 ஆயிரம் மாதிரிகள் இரத்த பரிசோதனை எடுக்கும் திறன் உள்ளது. அதில் 80 சதவீதம் முழுமையான பரிசோதனை முடிவுகளை பெற முடிகிறது.

இதில் தற்போது வரை 60 ஆயிரம் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. விருதுநகரில் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் பரிசோதனை செய்து அவசியம் என மாவட்ட ஆட்சியருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மதுரை போன்ற பிற மாவட்டங்களை போல் விருதுநகரிலும் கரோனா தொற்று படிப்படியாக குறையும்.

கரோனா குறித்து பொது மக்களிடம் மேலும் விழிப்புணர்வு ஏற்படு செய்யப்பட்டு வருகிறது. விருதுநகரில் பிளாஸ்மா வங்கி தொடங்க பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறினார்.

இதையும் படிங்க...அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை: தகவல்கள் உடனுக்குடன்...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.