கரோனா வைரஸ் தொற்றால் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். வைரஸ் பரவலைத்தடுக்க உலகம் முழுவதிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி கடந்த மாதம் 25 ஆம் தேதி முதல் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து வெளியில் பொதுமக்கள் வர வேண்டாம் என அறிவுறுத்தினார். இதனிடையே தமிழ்நாடு அரசும் மாவட்ட எல்லைகளை மூட உத்தரவிட்டது.
மேலும், மதுபானக் கடைகளை மூடவும் உத்தரவிட்டிருந்தது. மதுபானக்கடைகள் மூடப்பட்டிருந்தாலும் அங்காங்கே சட்டவிரோத மது விற்பனை நடந்தவண்ணமே இருந்தது.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவை மீறி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மாவுத்துப் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக அங்கு விரைந்த வத்திராயிருப்புக் காவல்துறையினர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குருநாதன் என்பவரை கைது செய்து அவரகடமிருந்து 388 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: ரூ.1000-க்கு 22 உணவு பொருள்கள் வீட்டிலேயே டெலிவரி - ஆட்சியர்