விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள கஞ்சம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ராவுத்தன்பட்டி கிராமத்தில் 70 வீடுகள் உள்ளன. இங்கு வசிப்பவர்கள் அனைவரும் ஆடு, மாடு மேய்த்தல் மற்றும் கூலி வேலை செய்பவர்கள். இந்நிலையில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது.
அதேபோல் ஒருசில பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் மரங்கள் சாய்ந்து, அருகாமையிலிருந்த வீடுகளின் மேல் விழுந்தன. இதன் காரணமாக 10க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் மாட்டு கொட்டகைகள் பலத்த சேதமைடைந்துள்ளன.
இதன் காரணமாக வீடுகளை இழந்த மக்கள் அரசின் உதவியை நாடி, செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். மேலும், தங்களுக்கு தேவையான உதவிகளை அரசு மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கையையும் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஊரடங்கால் தடைபட்ட நிகழ்ச்சிகள்... வருவாய் இழந்து தவிக்கும் பேண்ட்செட் இசைக்குழுவினர்!