ETV Bharat / state

சந்தையில் புதிதாக அறிமுகமாகியுள்ள மூலிகை ப்ளூடூத் முகக்கவசம்! - கொரோனா மாஸ்க்

சிலருக்கு முகக்கவசம் சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. ஆனால், கரோனா நெருக்கடியில் முகக்கவசத்தை அணிவதைத் தவிர்க்கவும் முடியாது. அதைக் கருத்திற்கொண்டு தயாரிக்கப்பட்டதுதான் மூலிகை முகக்கவசம். தற்போது அதனுடன் ப்ளூடூத் இணைக்கப்பட்டு இசையை அனுபவிக்கும் தொழில்நுட்ப வசதியுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதுகுறித்த சிறு தொகுப்பைக் காணலாம்.

herbal bluetooth facemask, மூலிகை ப்ளூடூத் முகக்கவசம்
herbal bluetooth facemask
author img

By

Published : Aug 3, 2020, 12:50 AM IST

Updated : Aug 5, 2020, 1:05 PM IST

விருதுநகர்: சுதந்திர காற்றைச் சுவாசிக்க முகக்கவசங்கள் தடையென நினைப்பவர்களுக்கும் தொழில்நுட்பங்களின் மீது அலாதி பிரியம் கொண்டவர்களுக்கும் புதுமையான முறையில் முகக்கவசங்களைத் தயார் செய்கிறார், நாகராஜ்.

இரண்டு மடிப்பாக தைக்கப்பட்ட முகக்கவசத்தின் நடுவில், ஐந்து கிராம் அளவில் வெட்டிவேர் நிரப்பி, இவர் தயாரிக்கும் மூலிகை முகக்கவசம், மக்களிடையே ஏற்கெனவே பெரும் வரவேற்பைப் பெற்ற ஒன்று. தற்போது அந்த முகக்கவசத்தில் புதிய முயற்சியாகத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ப்ளூடூத் இணைத்து சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த நாகராஜ், நீண்ட நேரம் முகக்கவசம் அணிபவர்களின் சிரமத்தைச் சிக்கலில்லாமல் நீக்க முடிவுசெய்தார். அதன் விளைவாக உருவானதுதான் வெட்டிவேர் முகக்கவசம். அதில் கூடுதல் இணைப்பாக தொழில் நுட்ப பிரியர்களையும், இளம் தலைமுறையினரையும் கவரும் வகையில் ப்ளூடூத் முகக்கவசம் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறார். இந்த முகக்கவசங்களுக்கு இளைஞர்கள் மட்டுமின்றி, அரசு அலுவலர்கள் தொடங்கி காவல் துறையினர் வரை அனைவரும் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

"தற்சார்பு வாய்ச்சொல் அல்ல வாழ்க்கை" - அசத்தும் 'மா' சாகுபடி விவசாயி!

இதுகுறித்து நாகராஜ் கூறுகையில், “சிலருக்கு முகக்கவசம் சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. ஆனால், கரோனா நெருக்கடியில் முகக்கவசத்தை அணிவதைத் தவிர்க்கவும் முடியாது. அதைக் கருத்திற்கொண்டு தயாரிக்கப்பட்டதுதான் மூலிகை முகக்கவசம். இதற்காக வெட்டிவேரைப் பயன்படுத்தி வருகிறேன்.

தற்போது அந்த முகக்கவசத்துடன் தொழில்நுட்பத்தை இணைத்து உருவாக்கி வருகிறேன். சென்னையிலிருந்து ப்ளூடூத் காதணி இசைக்கருவி கொண்டு வரப்பட்டு, இங்கு மூலிகை முகக்கவசத்துடன் இணைத்து தயார் செய்யப்படுகிறது.

300 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை, வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப பல்வேறு வகைகளில் இந்த முகக்கவசத்தை உருவாக்குகிறோம். மேலும், இந்த முகக்கவசத்திற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது” என்றார்.

'23 ஆண்டுகள், நாள்தோறும் 40 கி.மீ. சைக்கிள் பயணம்' - 51 வயது காவலரின் கதை

கடந்த சில நாள்களாக இந்த முகக்கவசத்தைப் பயன்படுத்தி வரும் பிரபு கூறும்போது, “ஆரம்பக் காலத்தில் சாதாரண முகக்கவசம் பயன்படுத்தியதை விட இந்த மூலிகை முகக்கவசத்தை பயன்படுத்தும்போது புத்துணர்ச்சியாக இருந்தது. அதைத் தொடர்ந்து பயன்படுத்தினேன். தற்போது தொழில்நுட்பத்துடன் இணைந்த முகக்கவசம் சில நாட்களாக பயன்படுத்தி வருகிறேன். பொதுஇடங்களில் கையில் கைப்பேசி பயன்படுத்துவதற்குப் பதிலாக, இந்த ப்ளூடூத் மூலிகை முகக்கவசத்தைப் பயன்படுத்தி வருகிறேன்” என்றார்.

சந்தையில் புதிதாக அறிமுகமாகியுள்ள மூலிகை ப்ளூடூத் முகக்கவசம்

இந்த வகையான முகக்கவசங்கள் நறுமணத்துடன் நாள் முழுக்க புத்துணர்ச்சியுடன் இருக்க உதவுகின்றன. பல வண்ணங்களில் காலத்தின் போக்குடன் ஒன்றி, தொழில் நுட்பத்தை இணைத்து தயாரிக்கப்படும் இந்த மூலிகை முறையிலான முகக்கவசங்கள் சந்தையில் தனித்து நிற்கின்றன. இவை உண்மையில் வரவேற்கத்தக்கவை தான்.

Last Updated : Aug 5, 2020, 1:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.