ETV Bharat / state

பட்டாசு ஆலை வெடி விபத்து - அவசர கால தொலைபேசி எண் வெளியீடு! - 1800 425 6743

விருதுநகர்: பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து ஏற்பட்டால் தகவல் தெரிவிக்க தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் சார்பில் தொலைபேசி எண் வெளியிடப்பட்டுள்ளது.

Helpline announced to report an Sivakasi explosion at firecracker factories.

author img

By

Published : Oct 27, 2020, 5:27 PM IST

இது குறித்து சிவகாசி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் வேலுமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “தீபாவளி பண்டிகைக்கு ஒரு சில தினங்களே உள்ள நிலையில் பட்டாசு உற்பத்தி, விற்பனை தீவிரமடைந்து வருகிறது. சிவகாசி பகுதிகளில் மிகுந்த பாதுகாப்புடன் பட்டாசு உற்பத்தியில் தொழிலாளர்கள் ஈடுபட்டாலும், அவ்வப்போது வெடிமருந்து உராய்வு, வெடிபொருள்கள் கவனக்குறைவாக கையாளுதல் உள்ளிட்ட காரணங்களால் வெடி விபத்து ஏற்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், சிவகாசி அருகே செங்குளம் கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில், 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவ்வாறு வெடி விபத்துகள் அப்பகுதியில் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், பட்டாசு, தீப்பெட்டி ஆலைகளில் அசம்பாவிதம் ஏற்பட்டால் 1800 425 6743 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...கீழாநெல்லிக் கோட்டையில் வெடிகுண்டு வீச்சு: வீசியவர்களைக் காவல் துறையில் ஒப்படைத்த மக்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.