வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது.
அதன்படி விருதுநகர் சுற்றுவட்டாரப் பகுதிகளான பாண்டியன் நகர், மல்லாங்கிணறு, வில்லிபத்திரி, அல்லம்பட்டி, சூலக்கரை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
கடந்த சில நாள்களாக விருதுநகரில் வெயில் வாட்டிய நிலையில் கனமழை பெய்திருப்பது விவசாயிகள், பொதுமக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
இதையும் படிங்க: விடாது பெய்யும் கனமழை - வால்பாறை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு