விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயில் ஜீயரை முன்னாள் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சென்னை மட்டுமின்றி டெல்டா மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
முதலமைச்சர் மேயராக இருக்கும் போது சென்னையை சிங்காரச் சென்னையாக ஆக்குவேன் எனக் கூறினார். ஆனால் தற்போது மழை பெய்தால் மூழ்கிற சிங்க் சென்னையாக உள்ளது. கருணாநிதி காலத்தில் கட்டப்பட்ட வள்ளுவர் கோட்டம், நீர் நிலையை முடி அதன் மீது கட்டப்பட்டது. சென்னையில் மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அவர்களுக்கு 5 ஆயிரம் வங்கி கணக்கு மூலம் கொடுக்க வேண்டும்.
மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து எந்த ஒரு வேலையும் நடைபெறவில்லை. கோயில் விஷயங்களில் தலையிடுவதற்கு அறநிலையத்துறை அலுவலர்களுக்கு எந்த அதிகாரம் கிடையாது" என்றார்.
இதையும் படிங்க: Anna University Semester exam: டிச.13ஆம் தேதி முதல் பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு தொடக்கம்