ETV Bharat / state

ஆட்சியர் அலுவலகத்திற்கு முன் தற்கொலைக்கு முயன்ற அரசு ஊழியர்! - அரசு ஊழியர் தற்கொலை முயற்சி

விருதுநகர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு அரசு ஊழியர் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

police
author img

By

Published : Nov 25, 2019, 10:17 PM IST

விருதுநகர் மாவட்டம் பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மூக்கையா (33). இவர் சங்கரலிங்கபுரம் ஆதி திராவிடர் மாணவர் விடுதியில் சமையலராக பணிபுரிந்து வருகிறார். அதே விடுதியில் வெம்பக்கோட்டையை சேர்ந்த பரமலிங்கம் என்பவரும் சமையலராக பணி புரிந்து வருகிறார். மூக்கையா பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்.

இந்நிலையில், பரமலிங்கம் தன்னுடன் பணிபுரியும் சக ஊழியரான மூக்கையாவை பட்டியல் இனத்தின் பெயரைச் சொல்லி திட்டியதாகவும், உன் சமூகத்தை சேர்ந்தவர்கள் சமையல் பணி செய்யக்கூடாது துப்பரவு பணி மட்டுமே செய்ய வேண்டும் எனக் கூறியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விடுதி காப்பாளரிடம் முறையிட்டும் உரிய தீர்வு கிடைக்கவில்லை.

இதனால், மனமுடைந்த மூக்கையா இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் தீடீரென்று பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அப்போது, அருகில் இருந்த காவலர்கள் பெட்ரோல் பாட்டிலை பறிக்க முயன்ற போது காவலர்களிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தற்கொலைக்கு முயலும் அரசு ஊழியர்

அதன்பின், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவரை மீட்டு சூலக்கரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

வேலை போய்விடும் என்ற மனஅழுத்தத்தால் தற்கொலை செய்த ஐடி பெண்!

Intro:விருதுநகர்
25-11-19

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

Tn_vnr_02_suicide_attempt_vis_script_7204885Body:விருதுநகர் அருகே சங்கரலிங்கபுரம் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் சமயலராக பணிபுரியும் மூக்கையா (33) உடன் பணிபுரியும் பரமலிங்கம் சாதியை சொல்லி திட்டுவதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
சூலக்கரை போலீசார் விசாரணை

விருதுநகர் பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்தவர் முக்கையா (33). இவர் கடந்த 5 ஆண்டுகளாக விருதுநகர் அருகே உள்ள சங்கரலிங்கபுரம் ஆதி திராவிடர் மாணவர் விடுதியில் சமையலாராக பணிபுரிந்து வருகிறார். அதே விடுதியில் வெம்பக்கோட்டையை சேர்ந்த பரமலிங்கம் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக சமையலாராக பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் பரமலிங்கம் மூக்கையாவை சாதியை சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் உன் சமூகத்தை சேர்ந்தவர்கள் சமையல் பணி செய்யக்கூடாது துப்பரவு பணி மட்டுமே செய்ய வேண்டும் எனக் கூறி உள்ளார். இது சம்பந்தமாக விடுதி காப்பாளரிடம் முறையிட்டும் உரிய தீர்வு கிடைக்காததால் மூக்கையா இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் தீடீரென்று பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயன்றார். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பாபரப்பு ஏற்பட்டது. மேலும் அருகில் இருந்த காவலர்கள் பெட்ரோல் பாட்டிலை பறிக்க முயன்ற போது காவலர்களிடம் மூக்கையா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவரை மீட்டு சூலக்கரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.