விருதுநகர் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் நாகேந்திரன் (33). இவர் நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றிவருகிறார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி 20க்கும் மேற்பட்டோரிடம் தலா மூன்று லட்சம் ரூபாய்வரை இவர் வசூலித்தள்ளார்.
பணம் கொடுத்துவர்களுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன், முன்னாள் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் ஆகியோரின் கையெழுத்துக்களைப் போலியாக போட்டு, போலியான அரசு பணி ஆணை தயாரித்து வழங்கியுள்ளார்.
இதை அறிந்த அவர்கள் மேலும் மூன்று பேருக்கு அரசு வேலை வாங்கிக்கொடுக்க வேண்டும் எனக்கூறி நாகேந்திரனிடம் பேசி, அவரை குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்து விருதுநகர் மேற்கு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். தற்போது நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: அமராவதி போராட்டம்: பத்திரிகையாளர்கள் மீது போலி கேஸ் போட்ட போலீஸ்!