ETV Bharat / state

அரசே நெல் கொள்முதல்: விவசாயிகள் மகிழ்ச்சி - நெல் சேமிப்பு கிடங்கு

விருதுநகர்: நெல் மூட்டைகளுக்கு உரிய விலை கிடைக்காமலும், சேமிப்புக் கிடங்கு இல்லாமலும் அவதிப்படும் விவசாயிகளின் கோரிக்கை எதிரொலியாக அரசே கொள்முதல் செய்தது.

நெற்கதிர்
நெற்கதிர்
author img

By

Published : Jun 13, 2020, 6:54 PM IST

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஐந்தாயிரம் ஏக்கருக்கு மேலாக நெல் பயிரிடப்பட்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக ராஜபாளையம் நகர் பகுதிகளான கொண்டநேரி கண்மாய், கடம்பன் குளம் கண்மாய், பெரியகுளம் கண்மாய், என பல்வேறு கண்மாய்களை உள்ளடக்கிய பாசன விவசாய நிலங்களில் நெற்பயிர்கள் அதிகமாக பயிரிடப்பட்டு தற்போது அறுவடை செய்யப்பட்டு உள்ளது.

இராஜபாளையம் தென்காசி சாலை பெரிய மாரியம்மன் கோயில் பகுதியில் இயங்கி வந்த நெல் சேமிப்பு கிடங்கு மூடப்பட்டுள்ளது. அதற்கு மாற்று ஏற்பாடாக வேறு இடத்தை அலுவலர்கள் தேர்வு செய்யாமல் அலட்சியம் காண்பித்து வந்துள்ளனர்.

இதனால் நெல்களை சேமிக்க முடியாமல் விவசாயிகள் சாலை ஓரங்களில் தார்ப்பாய்கள் மூலம் மூடி பாதுகாத்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து விவசாயிகள் அரசுக்கு உடனடியாக நெல் சேமிப்புக் கிடங்கு தேர்வு செய்தும், நெல்களைக் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, தற்போது அரசு தென்காசி சாலையிலும் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலை ஆகிய இரண்டு இடங்களிலும் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து வருகின்றனர். புதிய நெல்களுக்கு 1,865 ரூபாய் முதல் 1,905 ரூபாய் வரை குவிண்டாலுக்கு கொள்முதல் செய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.