விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அருகே சிப்பிப்பாறை கிராமத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடை பெற்ற பட்டாசு ஆலை வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த 12 பேரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழக்கும் நிகழ்வு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிலையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் தலா ரூ 3 லட்சம் வீதம் ரூ.36 லட்சத்திற்கான காசோலைகளை அமைச்சர்கள் கே.கே.எஸ். எஸ். ஆர் இராமச்சந்திரன் தங்கம் தென்னரசு ஆகியோர் வழங்கினர்.
கடந்த வாரம் நடைபெற்ற சிறப்பு மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும் அமைச்சர்கள் வழங்கினர்.
இதையும் படிங்க: மஞ்சள் பை வடிவில் மதுரை புரோட்டா! அசத்தும் உணவகம்..