விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியான அத்திகோவிலில் சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்த ஆறு பேர் காவல் துறையினரைக் கண்டதும் தெறித்து ஓடினர்.
பின்னர் அவர்களில் மூன்று பேரை மட்டும் காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் அப்பகுதியைச் சேர்ந்த ராமர், முத்து, ராஜேஷ் ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் கைது செய்த காவல் துறையினர், தப்பியோடிய மூன்று பேரையும் தீவிரமாக தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: கள்ளச்சாராயம் தயாரித்த 4 பேர் கைது