ETV Bharat / state

முன்னாள் ராணுவ வீரர் ரூ.10 கோடி மோசடி... வீட்டை முற்றுகையிட்ட மக்கள்!

author img

By

Published : Jul 24, 2021, 8:39 PM IST

சிவகாசி செங்கமல நாச்சியார் பகுதியில் சீட்டு நடத்தி மோசடி செய்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ரமேஷ் வீட்டை, பாதிக்கப்பட்டோர் முற்றுகையிட்டனர்

Former army man
முன்னாள் ராணுவ வீரர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலநாச்சியார் புரம் பகுதியை சேர்ந்த ரமேஷ், முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவர் அப்பகுதி மக்களிடம் சீட்டு நடத்தி வந்துள்ளார்.

அதன்பேரில், புதிய வீடு கட்டுவதற்காக அவர்களிடமே பல லட்சங்கள்வரை, ஒவ்வொரு ஆண்டும் வாங்கியுள்ளார். மொத்தமாக 10 கோடி ரூபாய்வரை பணம் பெற்று, அப்பகுதியிலேயே 2 சொகுசு வீடு கட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக ரமேஷ் தலைமறைவாகிவிட்டதாகவும், இது குறித்து அவரது மனைவியிடம் கேட்ட போது, எனது கணவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியாது என்றும், உங்களிடம் பணம் வாங்கியதும் எனக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார்.

இதனால் அவருக்கு பணம் கொடுத்த 50க்கும் மேற்பட்டோர், அவரது வீட்டினை இன்று(ஜூலை.24) முற்றுகையிட்டனர் .

முன்னாள் ராணுவ வீரர் ரூ.10 கோடி மோசடி

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துணை கண்காணிப்பாளர் பாபு பிரசாந்த், பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில் அனைவரும் கலைந்து சென்றனர்.

தொடர்ந்து, ரமேஷின் மனைவி லட்சுமி நாராயணிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், அவர் சீட்டு நடத்தவில்லை எனவும் கடனாக மட்டுமே பெற்றார் எனவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருத்தங்கல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பணி நீக்கம்: தனியார் பைனான்ஸ் நிறுவன உரிமையாளரை தாக்கிய ஊழியர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.