விருதுநகர்: கடந்த ஜனவரி 1ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள களத்தூரில் இயங்கிவந்த ஆர்.கே.வி.எம். பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அங்குப் பணிபுரிந்த குமார், பெரியசாமி, முருகேசன், செல்வம், முனியாண்டி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஐந்து தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த எட்டு பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். படுகாயமடைந்தோரில் நால்வர் மேல் சிகிச்சைக்காக மதுரை இராசாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெடிவிபத்து குறித்து நத்தம்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவந்தனர். இதனையடுத்து பட்டாசு ஆலை உரிமையாளரான முன்னாள் கவுன்சிலர் வழிவிடு முருகன் தலைமறைவானார். அவரைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த பட்டாசு ஆலை உரிமையாளர் வழிவிடு முருகனை காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: தடுப்புச்சுவரில் மோதிய கார்: 7 பேர் உயிரிழப்பு