விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வெம்பக்கோட்டை மற்றும் சுற்றி உள்ள ,300க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சுற்றுச்சூழல் விதியிலிருந்து பட்டாசு தொழிலுக்கு விலக்கு அளித்திடவும் சரவெடி, பேரியம் நைட்ரேட் ஆகியவற்றின் தடையை நீக்கவும் வலியுறுத்தி 21ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்கக் கோரியும், பேரியம் நைட்ரேட் மற்றும் சரவெடி பட்டாசு தயாரிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கவும், ஆய்வுகள் என்ற பெயரில் பட்டாசு ஆலைகளைத் தொழில் மேற்கொள்ள விடாமல் செய்யும் நடவடிக்கைகளை நிறுத்து வேண்டுமென்றும் கோரிக்கைகளை முன்வைத்து இன்று (மார்ச்.21) முதல் படடாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன.
![பட்டாசு ஆலைகள் இன்று முதல் காலவரையின்றி மூடல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14787371_thfc.jpg)
வெம்பக்கோட்டை, ஏழாயிரம் பண்ணை ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 300க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் பட்டாசு தொழிலை நம்பியுள்ள சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: பழமைவாய்ந்த விஷ்ணு சிலையை கடத்த முயன்ற நபர் பெங்களூருவில் கைது