விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் நேற்று முன்தினம் (பிப்.12) தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில், படுகாயமடைந்த 50க்கும் மேற்பட்டோர் விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, மதுரை, தூத்துக்குடி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சாத்தூர் அமீர்பாளையத்தைச் சேர்ந்த வனராஜா, இன்று(பிப்.14) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதன்மூலம், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: பட்டாசு ஆலை விபத்து: நிவாரண தொகையை உயர்த்த எம்பி மாணிக்கம் தாகூர் மக்களவையில் வலியுறுத்தல்!