விருதுநகர்: சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூர் பிரதான சாலையில் நேருஜி நகர் அமைந்துள்ளது. இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் ராமநாதன் என்பவர் சொந்தமாக வீடு கட்டி குடியிருந்து வருகிறார். மேலும் அவர் அந்த குடியிருப்பில் குழாய் கம்பெனி நடத்தி வருகிறார்.
பேன்சி ரக பட்டாசுகள் வெடித்து விபத்து
இந்நிலையில் இவரது வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பேன்சி ரக பட்டாசுகள் (Sivakasi Fancy fireworks explodes) வெடித்தன. இதில் அந்த கட்டடம் முழுவதுமாக இடிந்து தரைமட்டமானது.
இந்த விபத்தில் வேல்முருகன், மனோஜ் குமார் ஆகிய இருவர் பலத்த காயம் அடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இருவர் காயம்
மேலும் அங்கு வேலை செய்து கொண்டிருந்த பஞ்சவர்ணம் , கார்த்தீஸ்வரன் மற்றும் சமீதா ஆகிய 3 பேரை காணவில்லை.
மீட்பு பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் கட்டடத்தின் உரிமையாளர் ராமநாதன் தப்பி ஓடினார். இது குறித்து சிவகாசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கவனப்படுத்துவது கலைப் பொறுப்பு; உண்மையான சமூக மாற்றங்களுக்கு அரசு பொறுப்பு - சூர்யா