ETV Bharat / state

பாரம்பரிய உணவு வகைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி - தவிர்க்க வேண்டிய உணவு வகைகளான அப்பளம், சிப்ஸ் , துரித உணவுகள்

விருதுநகரில் பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் அதன் நன்மைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உணவுத் திருவிழா நடைபெற்றது.

பாரம்பரிய உணவு வகைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
author img

By

Published : Sep 28, 2019, 1:50 PM IST

விருதுநகர் தேசபந்து மைதானத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் சார்பாக பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் பாரம்பரிய உணவுகளால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு உணவுத் திருவிழா நடைபெற்றது.

இந்த உணவுத் திருவிழாவில் தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளான தினை முறுக்கு, கடலை, பருப்பு தட்டை, கேழ்வரகு அரிசி பொங்கல், கோதுமை கேக், சாமை பொங்கல், கேழ்வரகு பக்கோடா, கேழ்வரகு முறுக்கு, கம்பு லட்டு, கம்பு இடியாப்பம், கம்பு தோசை, சோள சீடை, சோள சீவல், சாமை முறுக்கு, கோதுமை இனிப்பு பணியாரம், கம்மங்கூழ், கடலை மிட்டாய், வெல்லம் போன்ற 106 வகையான தமிழக பாரம்பரிய உணவு வகைகள் இடம் பெற்றிருந்தன.

பாரம்பரிய உணவு வகைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

மேலும் அப்பளம், சிப்ஸ் , துரித உணவுகள் உள்ளிட்ட குழந்தைகள் தவிர்க்க வேண்டிய உணவு வகைகளை வகைப்படுத்தி தனியாக காட்சிப் படுத்தியிருந்தனர். இந்த உணவு திருவிழாவை ஏராளமான பொதுமக்கள் கண்டு பயனடைந்தனர்.

இதையும் படியுங்க:

மக்களை கவர்ந்த கடல் உணவுத் திருவிழா!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.