விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே எலக்ட்ரானிக்ஸ் கடை ஒன்று உள்ளது. இக்கடையில் கடந்த 21ஆம் தேதி 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள எலக்ட்ரிக் மோட்டார் ஒன்று திருடு போனது கண்டு கடை ஊழியர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து கடையில் பணிபுரியும் பாலமுருகன் என்பவர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியைத் தேடி வந்தனர். இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள எம்.புதுப்பட்டியைச் சேர்ந்த நாகமுத்து, தங்கம் ஆகிய இருவரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில், மோட்டாரை திருடியதை ஒப்புக்கொண்டார். அவர்களிடமிருந்து எலக்ட்ரிக் மோட்டாரை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: திருமண பேனரில் நித்தியானந்தாவை கண்டென்ட் ஆக்கிய மாப்பிள்ளைத் தோழர்கள் - விருந்தினர்கள் அதிர்ச்சி