விருதுநகர் அருப்புக்கோட்டை ரோட்டில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள், வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, அருப்புக்கோட்டை இருந்து மதுரையை நோக்கி சென்ற தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான காரை சோதனை செய்தனர். அதில் முறையான ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் கைப்பற்றினர்.
அந்த காரில் வந்த மதுரையைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் விசாரித்தபோது கார் அருப்புக்கோட்டை இருந்து மதுரை செல்வதாகவும், மதுரையைச் சேர்ந்த கற்கள் மணல் போன்ற பொருட்களை காண்ட்ராக்ட் அடிப்படையில் விற்பனை செய்து வரும் நிறுவனத்திற்கு சொந்தமான கார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 3 லட்சத்து 80 ஆயிரம், விருதுநகர் தாசில்தார் சீனிவாசனிடம் ஒப்படைக்கப்பட்டது.