தமிழ்நாட்டில் வரும் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள, நிலையில் தமிழ்நாடு முழுவதும் வாக்காளர்களுக்குப் பரிசுப்பொருள்கள், பணம் விநியோகம் செய்யப்படுகின்றவா எனக் கண்காணிக்கப் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுக்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நாரணாபுரம் விலக்குப் பகுதியில் சாத்தூர் சிப்காட் தனி வட்டாட்சியர் ரவீந்தர் தலைமையிலான பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அன்பின் நகர்ப் பகுதியில் உள்ள கல்குவாரியில் பணிபுரியும் மேலூர் பகுதியைச் சேர்ந்த வேலு என்பரின் மகன் அழகர்சாமி (33) வந்த இருசக்கர வாகனத்தைச் சோதனை செய்தபோது, அதில் உரிய ஆவணமின்றி மறைத்துவைக்கப்பட்டிருந்த ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 500 ரூபாயைப் பறிமுதல்செய்தனர். பின்னர் அப்பணம் சாத்தூரில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.