ETV Bharat / state

விருதுநகர் மாவட்டத்தில் நில அதிர்வு

விருதுநகர்: இராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதால்  பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

நிலஅதிர்வு
author img

By

Published : Mar 20, 2019, 12:07 AM IST

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் , தளவாய்புரம், இளம்திரைகொண்டான், கொல்லகொண்டான், மூகவூர், சுந்தரராஜபுரம், கம்மாபட்டி, நக்கனேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 2 முறை வீடுகள் குலுங்கியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் நிலஅதிர்வு

இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து வெட்ட வெளியில் தஞ்சமடைந்தனர். பின்னர் இது குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை வட்டாச்சியருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வட்டாச்சியர் சென்னையில் உள்ள பேரிடர் மேலாண்மை இயக்குனருக்கு தகவல் அனுப்பினார். இதைத் தொடர்ந்து ஆராய்ச்சி செய்த வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் சிறிய அதிர்வு ஏற்பட்டது உண்மைதான் எனக் கூறியதாக வட்டாச்சியர் தெரிவித்தார்.

விருதுநகர்
19-03-19

இராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் .20க்கும் மேற்ப்பட்ட இடங்களில் நில அதிர்வு  பொதுமக்கள் அச்சம்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்றல் நகர் பகுதி புதிய பேருந்து நிலையம் மற்றும் தளவாய்புரம், இளம்திரைகொண்டான், கொல்லகொண்டான், மூகவூர், சுந்தரராஜபுரம், யூனியன் அலுவகம் அருகே கம்மாபட்டி, நக்கனேரி, மற்றும் பல்வேறு பகுதிகளில் 2 முறை பலத்த வெடி சப்தம் கேட்டுள்ளது இதனால் பொதுமக்கள்   மிகுந்த அச்சத்துடன்  வீட்டை விட்டு வெளியே வந்துள்ளனர் இது குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள  பேரிடர் மேலாண்மை வட்டாச்சியர் தகவல் கொடுக்கப்பட்டு அவர் சென்னையில் உள்ள பேரிடர் மேலாண்மை இயக்குனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதைத் தொடர்ந்து வானிலை ஆராய்ச்சி மையம் மூலம் உறுதி செய்யப்பட்டு சிறிய அதிர்வு ஏற்பட்டது உண்மைதான் என கண்டறியப்பட்டுள்ள தாக தகவல்கள் கூறுகின்றனர். 
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.