விருதுநகர்: சிவகாசி மாநகராட்சியிலுள்ள 48 வார்டுகளில் திமுக 24 வார்டுகளிலும், காங்கிரஸ் 6 வார்டுகளில், மதிமுக ஒரு இடத்தில், விசிக ஒரு இடத்தில் என மொத்தம் 32 இடங்களில் திமுக கூட்டணி வெற்றிபெற்றுள்ளது. அதிமுக 11 இடங்களிலும், பாஜக ஒரு இடத்திலும், சுயேச்சை நான்கு இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன.
விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஐந்து நகராட்சிகளில் மொத்தமுள்ள 171 வார்டுகளில் திமுக கூட்டணி 144 இடங்களைக் கைப்பற்றி உள்ளன. இதில் திமுக மட்டும் 125 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
மேலும் ஐந்து நகராட்சிகளிலும் திமுக தனிப்பெரும்பான்மையில் நகர்மன்றத் தலைவர், துணைத் தலைவர் பதவியைக் கைப்பற்றியிருக்கிறது.
அதிமுக 15 இடங்களையும், சுயேச்சை 9 இடங்களிலும், அமமுக 2 இடங்களையும், பாஜக ஒரு இடத்தைக் கைப்பற்றியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஒன்பது பேரூராட்சிகளில் எட்டு பேரூராட்சிகளில் திமுக தனிப்பெரும்பான்மையுடனும், சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் திமுக கூட்டணியுடனும் கைப்பற்றியிருக்கிறது. மல்லாங்கிணறு பேரூராட்சியிலுள்ள 15 வார்டுகளில், 15 வார்டுகளையும் திமுக கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முத்துநகர் மாநகரை முத்தமிட்ட திராவிட முன்னேற்றக் கழகம்