ETV Bharat / state

அடிமை அரசால்தான் நீட் வந்தது - உதயநிதி ஸ்டாலின் காட்டம்!

author img

By

Published : Sep 12, 2020, 9:30 PM IST

விருதுநகர்: நீட் தேர்வு கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போது வரவில்லை, இந்த அடிமை அரசு இருப்பதால் தான் வந்தது என திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அடிமை அரசால்தான் நீட் வந்தது -உதயநிதி ஸ்டாலின் காட்டம்!

நீட் தேர்வு மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் சொந்த ஊரான அருப்புக்கோட்டைக்கு நேரில் சென்ற திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அவரது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது, திமுக சார்பாக ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவியை அவர்களிடம் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், 'துயரமான நிகழ்ச்சி இது. மாணவி துர்கா நாளை (செப்.13) நீட்தேர்வு ஏற்படுத்தியிருக்கும் மனஅழுத்தம் காரணமாக தேர்வு எழுதினால் மருத்துவராகும் கனவு தகர்ந்து விடும் என்று உயிரைப் போக்கி உள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இது சமமற்ற சம வாய்ப்பு இல்லாத ஏழை மாணவர்கள் மருத்துவராவதை தடுப்பதே இந்த நீட் தேர்வு என திமுக கூறி வருகிறது.

கருணாநிதி ஏற்கெனவே இதுபோன்ற நுழைவுத்தேர்வை நீக்கினார். கருணாநிதி, ஜெயலலிதா இருக்கும்போதும் நீட் தேர்வு வரவில்லை. ஆனால், தற்போது அதிமுக அரசு மத்திய அரசினுடைய அடிமையாக இருக்கிறது. ஆண்டுதோறும் மாணவர்கள் தற்கொலை செய்து வருகிறார்கள். இதற்கு இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும்.

கடந்த சில நாட்களுக்கு முன்புகூட அரியலூரில் விக்னேஷ் என்கின்ற மாணவர் இதேபோன்று நீட் தேர்வு எழுத முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். மாணவர்கள் தைரியமாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் கூறுகிறார். இதை சொல்வதற்கு எதற்கு முதலமைச்சர். இதை ஒரு மருத்துவர் சொல்லலாம். இதற்கு முதலமைச்சர் தேவை இல்லை. ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக டெல்லி வரை சென்று, பிரதமரை சந்தித்து வருகின்ற முதலமைச்சரும் அமைச்சர்களும் ஆட்சியை கையில் வைத்துக்கொண்டு, நீட் ரத்திற்கான தொடர் முயற்சியைக் கூட செய்யவில்லை என்றால், இதற்கு ஏற்கனவே ஒருத்தர் சொன்னார் 'Impotent ஆட்சி' என்று. அது இப்போது உண்மையாகி வருகிறது.

உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது, இதேபோன்ற வழக்கு உயர் நீதிமன்றத்தில் இருந்தது. ஆனால், மாணவர்களைத் தொடர்ந்து மக்கள் போராட்டம் நடத்தியதன் விளைவாக, ஒரே நாளில் டெல்லியில் மெரினா போராட்டத்தை முடித்து வைத்தார்கள். அப்போது செய்ய முடிந்த அரசு இப்போது செய்ய முடியாதா? மாணவர்கள் தெம்பாக இருங்கள். தைரியமாக எழுதுங்கள். 8 மாதத்தில் ஆட்சி மாறும். நல்ல முடிவு இருக்கும்' என்றார்.

இதையும் படிங்க...நீட் அச்சம்: மேலும் ஒரு தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.