உலகம் முழுவதும் கரோனா பாதிப்பின் காரணமாக, பல்வேறு வகையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் 45 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் தவிர, ஏராளமான கடைகள் மட்டுமல்லாமல் நாடு முழுவதுமுள்ள மது கடைகளும் மூடப்பட்டன.
தற்போது இன்று முதல் மது கடைகளைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. அதனைத் தொடர்ந்து மது கடைகள் திறப்பதைக் கண்டித்து விருதுநகரில் முன்னாள் அமைச்சரும் அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தனது இல்லத்தில் கறுப்பு சட்டை அணிந்து, கறுப்புக் கொடி ஏந்திப் போராட்டம் நடத்தினார்.
இதில் திமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் 10க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: