விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள மல்லாங்கிணரில் திமுக முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவர், ”அடிப்படை அறிவு இல்லாமல் இருக்கும் பாண்டியராஜன் தொல்லியல் துறை அமைச்சராக இருப்பது சாபக்கேடு, புராதன சின்னம் என்பது வேறு நினைவுச்சின்னம் என்பது வேறு என பாண்டியராஜன் பேசியிருப்பது அவருடைய அறியாமையைக் காட்டுகிறது.
உள்நோக்கத்தோடு கோயில்களையும் இந்து சமய அறநிலையத் துறையையும் அடியோடு அழித்துவிடும் நடவடிக்கையை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது, தலை சொன்னதை கை செய்யும் என்பதைப் பாண்டியராஜன் நிரூபித்திருக்கிறார்” எனச் சாடினார்.
தொடர்ந்து பேசியவர், ”மத்திய அரசின் செயலை திமுக வன்மையாக எதிர்க்கிறது. வழிபாட்டுத் தலங்களாக உள்ள திருக்கோயில்களைக் காட்சிப் பொருளாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை அனுமதிக்க மாட்டோம். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல் துறை மூலம் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நினைக்கிறது, இதை திமுக வன்மையாகக் கண்டிக்கிறது” எனக் கூறினார்.
இதையும் படிங்க: நாகையில் மருத்துவக் கல்லூரி 'வரலாற்றில் ஒரு மைல் கல்' - ஓ.எஸ். மணியன் பெருமிதம்!