ETV Bharat / state

'தேமுதிகவுக்கு துரோகம் செய்த அதிமுக படுதோல்வி அடையும்'- தேமுதிக தொண்டர்கள் - தேர்தல் 2021

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து போட்டி என்ற அறிவிப்பை தேமுதிக வெளியிட்டதைத் தொடர்ந்து, தேமுதிகவுக்கு துரோகம் செய்த அதிமுக படுதோல்வி அடையும், நாளைய முதல்வர் விஜயகாந்த் என கோஷமிட்டு அக்கட்சியனர் ராஜபாளையம் பகுதியில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

dmdk celebration
தேமுதிகவினர் கொண்டாட்டம்
author img

By

Published : Mar 12, 2021, 7:47 PM IST

விருதுநகர்: எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிடுவதாக தேமுதிக அறிவித்திருக்கும் நிலையில், பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதி தேமுதிகவைச் சேர்ந்த சண்முகநாதன், பூ கடை முருகேசன் தலைமையில் அக்கட்சியினர் காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் ஊர்வலமாக வந்து பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதால் தேமுதிகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த தேமுதிக, தொகுதிப் பங்கீடில் உடன்பாடு ஏற்படாத நிலையில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது. இதையடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிடுவதாக இன்று அக்கட்சி அறிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள தேமுதிக தொண்டர்கள் இந்த அறிவிப்பை பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடிவருகின்றனர்.

ராஜபாளையம் பகுதியில், தேமுதிகவுக்கு துரோகம் செய்த அதிமுக படுதோல்வி அடையும், நாளைய முதலமைச்சர் விஜயகாந்த் என முழக்கமிட்டு தேமுதிகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: 'இப்போது அதிமுகவில் இருப்பவர்களை எனக்கு பிடிக்கவில்லை' - நடிகர் செந்தில்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.