விருதுநகர் மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி, இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், நானும் உங்களைப் போல் கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்தவன்தான். நான் மக்களுக்கு நிறைய செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறேன். அதனால் எனக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் பாதியிலேயே அழத் தொடங்கினார். நான் பத்தாம் வகுப்பு படிப்பதற்கு கூட வசதி வாய்ப்புகள் இல்லை. பத்தாம் வகுப்பு படிக்க இரவு நேரத்தில் ஆலையில் வேலை செய்து படித்தேன். நான் வாழ்க்கையில் ஏழ்மை குடும்பத்தில் பிறந்து மிகுந்த கஷ்டப்பட்டு உள்ளேன். என்னை மக்களவைக்கு அனுப்பினால் ஏழைகளின் கஷ்டத்தை உணர்ந்து, அதற்கேற்ற திட்டங்களுக்கு பாடுபடுவேன் என உறுதியளித்தார்.
தன் வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டங்களை கூறி கண்ணீர் சிந்திய தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியை கண்டு அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.