பெருந்தலைவர் காமராஜரின் சொந்த ஊரான விருதுநகரில் அவரது 118ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. விருதுநகரில் காமராஜர் நினைவு இல்லத்தில் அவரது திருவுருவச் சிலைக்கும், காமராஜர் மணிமண்டபத்தில் உள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பெருமாள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கரோனா ஊரடங்கு காலத்தில் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து காமராஜரின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.
கடந்த 2006ஆம் ஆண்டிலிருந்து காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்து பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆனால், தற்போது ஊரடங்கு காலம் என்பதால், கடந்த 14 ஆண்டுகளாக கொண்டாடப்பட்ட கல்வி வளர்ச்சி நாள், தற்போது முதன்முறையாக கொண்டாட முடியாத சூழல் ஏற்பட்டு, பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.