ETV Bharat / state

விருதுநகரில் கனமழை பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச.18) விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..! - rain update

Virudhunagar School Leave: கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டப் பள்ளிகளுக்கு மட்டும் நாளை(டிச.18) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.

virudhunagar School Leave
கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டப் பள்ளிகளுக்கு மட்டும் நாளை டிச.18 விடுமுறை - மாவட்ட ஆட்சியர்!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 17, 2023, 10:48 PM IST

விருதுநகர்: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல சுழற்சி நிலவும் காரணத்தால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி , கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதாலும், கனமழை எச்சரிக்கை இருப்பதாலும் நாளை(டிச.18) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, இந்த நான்கு மாவட்டங்களிலும், மிகக் கனமழை பெய்வதால் சாலைகளிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்துச் செல்கிறது. இதனால், இந்த 4 மாவட்டப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை(டிச.18) விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதனைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டப் பள்ளிகளுக்கு மட்டும் நாளை(டிச.18) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையும் படிங்க: திருமணத்தில் இப்படியும் வரதட்சனை வாங்கலாமா? ராஜஸ்தானில் நடந்த பகீர் சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.