விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி எண்146, 147, 148 மையங்களுக்கான வாக்குப்பதிவு அரசு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்று வருகிறது.
இந்த வாக்குச் சாவடிகளில் வாக்களிப்பதற்காக கலை 7மணி முதலே மக்கள் கூட்டம் வர ஆரம்பித்து விட்டது. ஆனால் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வந்து வாக்களிப்பதற்கு ஏதுவான வசிதிகள் செய்து தரப்படவில்லை.
வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கும், வயதானவர்களுக்கும், நோயாளிகளுக்கும் பயன்படுத்தற்கான சக்கர நாற்காலிகள் போதுமான அளவில் இல்லை. இதனால் வாக்களிக்க வந்த முதியவர்கள் சிரமம் அடைந்தனர்.
மாற்றுத் திறனாளிகள், வயதானவர்கள், நோயாளிகள் பயன்படுத்துவதற்காக மாவட்ட அளவில் 305 சக்கர நாற்காலி பயன்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த வசதிகள் முறையாக செய்துதரப்படவில்லை என்று பொதுமக்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது.