ETV Bharat / state

சதுரகிரி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி!

author img

By

Published : Jan 25, 2021, 9:40 PM IST

விருதுநகர்: தை பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் சென்று தரிசிக்க 4 நாள்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சதுரகிரி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி  Sathuragiri Temple  Devotees are allowed to visit the Sathuragiri Temple  தை மாத பௌர்ணமி  Full moon in the month of Tai  Full moon
Sathuragiri Temple

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை கடல் மட்டத்திலிருந்து சுமார் 4 ஆயிரத்து 500 உயரத்தில் அமைந்துள்ளது. அங்கு பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை 4 நாள்கள், பௌர்ணமி 4 நாள்கள் என மொத்தம் 8 நாள்கள் மட்டுமே மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இந்நிலையில், பிரதோஷம், தை மாத பௌர்ணமியை முன்னிட்டு நாளை (ஜன.26) ஆம் தேதி முதல் வரும் 29 ஆம் தேதி வரை 4 நாள்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல வனத்துறை, கோயில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

மேலும் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் பக்தர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து வந்தால் மட்டுமே கோயிலுக்குச் செல்ல அனுமதிக்க முடியும் என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: மார்கழி பெளவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.