ETV Bharat / state

18 மாவட்டங்களை குறிவைத்துள்ள கனமழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! - Rain Report for Tamil Nadu

உள் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 28, 2024, 4:28 PM IST

சென்னை: வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளை பொறுத்தவறையில் வறண்ட வானிலை நிலவியதாகவும், உள் தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவு: விருதுநகர் 8செ.மீ முதல் 2செ.மீ வரையிலும்; சேலம் 7செ.மீ முதல் 1செ.மீ வரையிலும்; ராணிப்பேட்டை 6செ.மீ முதல் 2செ.மீ வரையிலும்; நாமக்கல் 4செ.மீ முதல் 2செ.மீ வரையிலும்; தூத்துக்குடி 3செ.மீ வரையிலும்; திருவள்ளூர், காஞ்சிபுரம், கரூர், திருப்பத்தூர், சென்னை, தஞ்சாவூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் 3செ.மீ முதல் 1செ.மீ வரையிலும்; ராமநாதபுரம், ஈரோடு, வேலூர், 3செ.மீ முதல் 2செ.மீ வரையிலும்; விழுப்புரம் 2செ.மீ வரையிலும்; கிருஷ்ணகிரி, சிவகங்கை, நீலகிரி 2செ.மீ முதல் 1செ.மீ வரையிலும்; கோயம்புத்தூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் தலா 1செ.மீ அளவும் மழை பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சமவெளிப்பகுதிகளில் பதிவான வெப்பநிலை: அதிகபட்ச வெப்பநிலையாக மதுரை விமான நிலையம் மற்றும் நகர்ப் பகுதிகளில் 39.4 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக ஈரோடு மாவட்டத்தில் 19.8 டிகிரி செல்சியசும் பதிவாகியுள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:

  • உள் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (செப்.28) முதல் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி வரையில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
  • இன்று (செப்.28) கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
  • நாளை (செப்.29) கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
  • நாளை மறுநாள் (செப்.30) கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
  • அக்டோபர் மாதம் 3 மற்றும் 4ஆம் தேதி வரையில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதையும் படிங்க: வைட்டமின் D அதிகமுள்ள டாப் 5 உணவுகள் இதோ!..மழைக்காலத்தில் மறக்காமல் சாப்பிடுங்கள்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

  • தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று (செப்.28) முதல் 30ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 5 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
  • அரபிக்கடல் பகுதிகளில் இன்று (செப்.28) தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
  • தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று (செப்.28) முதல் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
  • கேரளா கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் இன்று (செப்.28) முதல் 30ஆம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

ஆகையால், மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.