விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் - பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு 40 விழுக்காடு ஊனம் உள்ள அனைவருக்கும் மாதம் ரூபாய் 3,000 வழங்க வேண்டும். கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூபாய் 5,000 உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். தனியார் துறையில் 4 விழுக்காடு இட ஒதுக்கீடும் அரசு துறையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு 2013படி 4 விழுக்காடு இட ஒதுக்கீட்டை கண்டறிந்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தினர்.