உலகை உலுக்கும் கரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. அதன்படி, மார்ச் 24ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேறுவதை தவிர்க்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில் 100 விழுக்காடு கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருள்களை விற்பனை செய்யும் கடைகளான காய்கறி, உணவகம், மீன் மார்க்கெட் உள்ளிட்டவைகள் மட்டுமே செயல்பட்டுவருகின்றன.
இதையும் படிங்க: ’மாலை முதல் தேநீர் கடைகள் இயங்க அனுமதி கிடையாது’