விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நகராட்சிப் பகுதியில் மொத்தம் 42 வார்டுகள் உள்ளன. இங்கு பாதாள சாக்கடைத் திட்டம், தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம், ரயில்வே மேம்பாலப் பணிகள் என மொத்தம் 500 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகள் கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்று வருகின்றன. இத்திட்டங்களின் கீழ் முக்கிய சாலைகள் தொடங்கி சாலைகள், தெருக்கள் என அனைத்துப் பகுதிகளிலும் பள்ளம் தோண்டப்பட்டு சரிவர மூடாமல் உள்ளன. இவற்றின் காரணமாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
எனவே விரைவாக சாலைகளை சீரமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், ராஜபாளையம் பகுதியைச் சுற்றியுள்ள சமூக ஆர்வலர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலகம் முன்பு திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலைகளை சீரமைக்கக் கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் - சாலைகள் சீரமைக்க கோரிக்கை
விருதுநகர் : ராஜபாளையத்தில் பாதாள சாக்கடை, தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கென தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்கக் கோரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.